நோக்கம் மாறா முன்னே நகர்ந்து,
கனவுகளை துரத்திகொண்டும்,
பலர் கானாகான துணையாய் நின்றும்;
இன்றைய பொழுது நன்றாய் மாற
நாளைய பொழுது களிப்பாய் துவங்க;
துவளாது தடைகளை தகர்த்து
முன்செல்வதயே குறியாய் கணித்து;
மெய்நிகர் இலக்கை என்றோ ஒருநாள்
அடைவேன் என்ற நம்பிக்கையில்
ஓடிக்கொண்டிருக்கும்…
சலிக்காத கடிகாரம்!
– திவ்யா
