கதிருக்குள் கீச்சிடும் தேன் சிட்டு
களவாட காத்திருக்கும் பருந்தை மறந்து,
காலை கதிரவனை களவாடிக்கொண்டிருக்கும்
செக்கச்சிவந்த வானத்தை
கண்கொட்டாமல் கவனிக்கும் நொடி…
திக்கென்று நிலைகொண்ட சிட்டின் இதயம்,
வேடிக்கை பார்த்த கண்களில் கலக்கம்,
அருகில் நெருந்தியதோ பருந்து
என பதறிய பாவை …
கண்சிமிட்டும் கார்மேகம்
இடியென கூக்குரலிலிட்டு சொல்லிற்று…
காதலில் தவிக்கும் நான்,
என்னை பார்த்து திணறும் நீ,
உன்னை உணவாக்க திரியும் பருந்து,
இது எதையும் அறியாமல்,
நிலவில் மோகம் கொள்ளும் கதிரவன்!
ஊர்மெச்சும் கதிரவனை மறந்து
இரவெல்லாம் விண்மீன்களோடு
களியாட்டமிடும் நிலவு!
மனதின் வலி…
உயிரின் மதிப்பு…
அனைத்தையும் வென்ற..
வென்நிலவின் திமிர்!
Love
D❤️
